பிரதான செய்திகள்

மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது. இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 38 பைசா குறைவு.

டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அனைத்து முக்கிய ஆதாரங்களையம் பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்து விட்டதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த அனைத்து முக்கிய ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டோம்.

பிந்திய செய்திகள்

சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் விஜய்காந்துக்கு பாஜக மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடுகளை பாஜக நடத்த ஆரம்பித்துள்ளது. முதலாவது மாநாடு சென்னை மைலாப்பூர் தொகுதியில் நடந்தது. அப்போது நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:

சிட்னியில் ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் 3-வது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் தேனீர் இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்துள்ளது.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்களுடனான போர் நிறுத்த ஓப்பந்தத்தை பயன்படுத்தி சிறிலங்கா சாதித்துக் கொண்டவை எவை என்பதை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அறுவறுக்கத்தக்க மற்றும் ஆபாசமான விஷயங்கள் என்று குறிப்பிட்டு - அப்படிப்பட்ட விஷயங்களை இணையத்திலே பரப்புவதாக தாங்கள் குற்றம்சாட்டும் பெரிய இணைய தளங்களுக்கு எதிராக புதிய தணிக்கை நடவடிக்கைகளை சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மட்டு,வாகரைப் பிரதேசத்தில் தொலைபேசி பாவனை தொடர்பாக இராணுவத்தினரால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-த ஹின்டு' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் நகரில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொண்டுவருவதாகவும். இதனையடுத்து பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆண்டு பிறந்தும், இலங்கை அரசின் வான்படை நிர்கதியுற்ற தமிழ் மக்கள் மீதான வரையறையற்ற குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

இல‌ங்கை‌யிட‌ம் இரு‌ந்து க‌ச்ச‌த்‌‌ தீவை ‌மீ‌ட்க‌க் கோ‌ரி அதிமுக பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌க்குமாறு ம‌த்‌‌திய அரசு‌க்கு உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் நோட்டீஸ் அனு‌ப்‌பியு‌ள்ளது.

காசாப் பகுதியிலுள்ள பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் நிலையில் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. காசா நிலப்பரப்பிலுள்ள மருத்துவமனைகளும் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகிவருகின்றன.

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரிகளுக்கும் பாகிஸ்தானிலுள்ள குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் முறைப்படி கையளித்திருப்பதாக இந்தியா கூறுகிறது.
Result Pages  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13 

வீடீயோ செய்திகள்
Last posted Videos
Special News Video
தாயகச் செய்திகள் - 1/2/2009
Special News Video
தாயக நிலவரம் - 1/3/2009
Special News Video
தாயகச் செய்திகள் - 1/1/2009
Special News Video
தாயக நிலவரம் - 1/2/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

Search
:

© The Service rights to www.tamilr.com